பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ஹரியானாவில் 52 இடங்கள் பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கும். காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்து சமுதாயத்தை ஜாதிகள் பிளந்து சிறுபான்மையினரை மதத்தால் இணைத்து தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள் மூன்றாவது முறையாக அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதற்கு காரணம் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் அணுகுமுறையும் தான். பா.ஜ.க வை ஹரியானா மக்கள் ஆதரவளித்து பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் இப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கான ஒரு அடையாளமாக சென்னையில் நடந்த ஏர் ஷோ அமைந்தது. மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பலரது வீட்டு கதவைத் தட்டி உள்ளனர். சுயநலத்திற்காகவும், விளையாட்டு அமைச்சரின் நண்பர்களுக்காகவும் கார் ரேஸ் நடத்தினார். அதற்கான முன்னேற்பாடுகளை அவர் நான்கு நாட்களாக சென்று பார்வையிட்டு வந்தார். ஆனால் தற்பொழுது துணை முதல்வர் ஆன பிறகு அவருடைய கடமையை மறந்து விட்டார்.

வருகின்ற 2026 தேர்தலில் தி.மு.க-விற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு உண்டு. சட்டம் 370 சரத்தை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். எனவே எண்ணிக்கையின் அடிப்படையில் பாஜக தோல்வி அடைந்து விட்டதாக கூறக்கூடாது. பாஜக எப்பொழுதுமே பட்டியலை இன மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய கட்சி

தேர்தலில் திருமாவளவனின் வார்த்தையை கூறி வாக்கு சேகரித்த திமுக சட்டமன்றத்தில் உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைத்தது. எனவே திருமாவளவன் பேச்சுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தேன். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது சரிதான். மது ஒழிப்பு மாநாடு என்பது ஒரு நாடகம் திமுக விசிகவின் கூட்டு நாடகம் மாநாடு முடிந்தவுடன் மது ஒழிப்பு முடிந்து விட்டது.

மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவனின் நாற்காலிக்கு அருகில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லாரும் சாராய உற்பத்தி ஆலைகளின் உரிமையாளர்கள் தான். மதுவை கொண்டு வந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பலர் குடிப்பதற்கு காரணமாக இருந்துள்ளார். எனவே அவருடைய கட்டவுட்டை மாநாட்டில் திருமாவளவன் வைக்கவில்லை அதற்கு பதிலாக ராஜாஜியின் கட்டவுட் வைத்ததற்கு காரணம் அவர் மது ஒழிப்பை முன்னுறுத்தி வைத்தவர் என்பதற்காக தான்,

இன்னும் மூன்று மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதில் சிரமம் ஏற்படும். கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் ஆர் எஸ் எஸ் பேரணியை தொடங்கி வைத்ததற்காக கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை அதிமுக நீக்கியுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா…… தளவாய் சுந்தரத்தை நான் வரவேற்கிறேன் என்று பதில் அளித்தார்.

 
 
 26 Oct, 2025
26 Oct, 2025                           4
4                           
 
 
 
 
 
 
 
 

 08 October, 2024
 08 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments