திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் மூளை சாவடைந்த 42 வயது பிரான்சிஸ் சேவியரின் ஐந்து உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. மூளைச் சாவடைந்த அவரது உடலில் இருந்து கிட்னி நுரையீரல் இதயம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது..

திருச்சி இருங்களூர் எஸ் ஆர் எம் கல்லூரியில் இருந்து கிரீன் கார்டயர் அமைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் 15 நிமிடத்தில் விமான நிலையத்திற்கு இருதயமானது கொண்டு செல்லப்பட்டது. திருச்சியில் இருந்து காலை 07.55 மணிக்கு விமான மூலம் திருச்சியில் இருந்து சென்னை எம் ஜி எம் மருத்துவமனைக்கு இதயமானது எடுத்துச் சொல்லப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நோயாளிக்கு செலுத்தப்பட்டது. திருச்சியில் இருந்து இதயமானது நோயாளிக்கு எடுத்து செல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
எஸ் ஆர் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரின் உழைப்புமே இன்று ஐந்து உயிர்களை காக்க உதவி உள்ளது. இறந்தும் ஐந்து உயிர்களை காத்த பிரான்சிஸ் சேவியரை அனைவரும் போற்றி பாராட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments