குளிர்காலமாக கருதப்படும் மார்கழி மாதத்திற்கு முன்பு தொடங்கி திருச்சியில் கடும்குளிர் மட்டுமன்றி ஒரளவு பனிப்பொழிவும் இருந்து வந்தது.

தொடர்ந்து முன்பனி, பின்பனி என கிராமத்தினர் கூறுவது போன்று பின்பனிக்காலமான மார்கழி மாதத்தைத் தொடர்ந்துவரும் தை மாதத்தில் திருச்சியில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.
திருச்சி மாநகரில் காலை 8மணி வரை சாலையில் கடும்பனிப் பொழிவினாலும், கடும்குளிராலும் பொதுமக்கள் சாலைகளில் அதிகளவு நடமாட்டம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்,

திருச்சி – மதுரை நெடுஞ்சாலைகளில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பனிசூழ்ந்து காணப்பட்டது. பஞ்சபூர். பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
குளிர் பிரதேசமான ஊட்டி மற்றும் கொடைக்கானலை போன்ற தட்பவெட்ப நிலையை திருச்சி மக்களும் அனுபவித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments