திருச்சி கே.கே.நகரில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் 47வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ரைபில் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள்1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இதனிடையே கார் மற்றும் பைக் ரேசிங்கில் முன்னணி பதித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கேற்று வருகிறார்.அந்த வகையில் கோவையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற அவர் தற்போது திருச்சியில் நடைபெற்ற வரும் துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
10மீ, 25 மீ மற்றும் 50மீ பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறும் திருச்சி ரைபில் கிளப் வெளியே திரண்டு இருந்த ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, கையசைத்துவிட்டு, வெற்றிக்கான சிம்பல் தம்ஸ் அப் செய்து பின்னர் போட்டியில் பங்கேற்கச் சென்றார்.
நடிகர் அஜித்குமார் போட்டியில் பங்கேற்றுள்ளதால் துப்பாக்கிச் சுடும் இடத்தில் வளத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments