திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பகல் முழுவதும் வெயில் இருந்தாலும் மாலை கரு மேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பொழிகிறது.

இதில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தில்லைநகர், சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதே போல் சமயபுரம், நம்பர் ஒன் டோல்கேட், வயலூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் இந்த மழை பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவிரி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து இல்லாமல் வரண்டு கிடக்கும் சூழலில் வாழை, நெல் உள்ளிட்ட கோடை பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் மழை மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments