திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் ஹெலன் கெல்லர் அவர்களின் நாளைக் கொண்டாடும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்காக பயிற்சிப் பெற்று, தற்போது தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிகழ்வு வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை நூலகர் தனலெட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார்.திருவானைக்காவல் வாசகர் வட்ட தலைவர் விஸ்வேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினர்.
பார்வை மாற்று திறனாளி குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். கதைச்சொல்லி அமுதா அவர்கள் நிகழ்வினைத்தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் பவானி, எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார், சபானா அஸ்மி, லஷ்மி தங்கம்,ஆசிரியர் மும்தாஜ், நஸ்ரின், நூலகர் சகிலா உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments