இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்களின் சீறிய முயற்சியில் சாலைவிபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டும், சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரியும் 330 நபர்களுக்கு V கௌதமி, ELIXIR பவுண்டேசன் (Tamilnadu President, Received Indira Gandhi National Award from honourable president of India, Pranab Mukarjee for the best student of India and social work) மற்றும் True Home பைனான்ஸ் ஆகியோர் இணைந்து ரூ.1100 மதிப்புள்ள தலைக்கவசங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர், திருச்சி சரக உதவி தளபதி திரு. ராஜன், வட்டார தளபதி திரு.சையூப் மற்றும் துணை வட்டார தளபதி திருமதி.பிரவீனா தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வுகளை ஊர்க்காவல் படையினருக்கு அறிவுறுத்தினார்கள்.
அதன் பிறகு, ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட தலைக்கவசங்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அணிவித்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 08:00 மணிக்கு ஊர்க்காவல் படையினர் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் திருச்சி மாவட்ட ஆயுதப்படையிலிருந்து சாலை விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர். இப்பேரணியை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மேலும், திருச்சி மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments