திருச்சி ரயில்வே மண்டல அலுவலக நுழைவாயிலில் “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் சூட்டப்பட்டதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய கழக நிர்வாகிகள், தமிழ்மொழி மற்றும் தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனை கண்டித்து 05.03.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்சி ரயில்வே மண்டல அலுவலக நுழைவாயில் முன்பு போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில நிர்வாகி கு. இராமகிருட்டிணன் அறிவித்தார்.
இதன் எதிரொலியாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயிலில் பொறிக்கப்பட்டிருந்த
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி பெயர் கல்வெட்டுகள் பின்னர் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments