பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஹோலிகிராஸ் கல்லூரியின் பேச்சு மற்றும் செவித்திறன் ஆய்வுத்துறை மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் தெப்பக்குளம் பகுதியில் பேரணியாகச் சென்றும், மின்சார ஆட்டோ மற்றும் மின்சார மோட்டார் சைக்கிளில் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், செவித்திறனை பாதிக்கும்வகையில் அதிக ஒலியுடன் ஹெட் போன் மூலம் பாடல்கள் கேட்கக்கூடாது,
அதிகநேரம் ஹெட்போன்கள் பயன்படுத்தக்கூடாது மேலும் சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படுத்தும்வகையில் அதிக ஒலிஎழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது, காற்றுமாசினை கட்டுப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என்பதனை வலியுறுத்தும்விதமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன், கையில் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வை கல்லூரி செயலாளர் அருட்சகோதரி. சற்குணா, முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி, யங் இந்தியன்ஸ் தலைவர் சஷாங் மோதி கே மற்றும் பேச்சு மற்றும் செவித்திறன் ஆய்வுத்துறை தலைவர் சுந்தரேசன் ஆகியோர் பங்கேற்று மின்சார ஆட்டோ ஓட்டும் 100பெண் ஓட்டுநர்களுக்கு முதலுதவி பெட்டிகளை வழங்கினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments