திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியத்தினுடைய இல்லம் தேடி கல்வி இரண்டாம் ஆண்டு வெற்றி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவினுடைய நினைவு பரிசினை மாவட்ட ஆட்சியரிடம், அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட் சென்னி மற்றும் அந்தநல்லூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பெல்சிட்டா மேரி ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
அதுசமயம் இத்திட்டத்தில் மையங்கள் செயல்படும் விதம், ஆயிரம் மாணவர்களை அமர வைத்து வாசித்தல் திருவிழா நடத்திய நிகழ்வு மற்றும் சிறப்பு குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்த கோப்புகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments