Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே வீடு புகுந்து பணம் நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நத்தம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த செல்லதுரை மனைவி சுமதி (45). இதில் செல்லதுரை கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி சுமதி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சரவணீஸ்வரன் சுப்ரஜா என்ற மகனும் மகளும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதில் சுமதி தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று மாலை குளித்தலை சென்று விட்டதாக தெரிய வருகிறது. வீட்டில் சுமதியின் மகள் மற்றும் மகன் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து லாவகமாக வீட்டின் உள்புறம் சென்று வீட்டில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். 

அதிலிருந்து 5- பவுன் கொண்ட தங்க ஆரம் மற்றும் கல் வைத்த நெக்லஸ் மூன்று அரை பவுன் மற்றும் மோதிரம் ஒரு பவுன் மற்றும் கால் பவுன்மோதிரம் முக்கா பவுன் அளவுள்ள தோடு மொத்தம் பத்தரை பவுன் நகை மற்றும் ரொக்கம் 10,000 பணம் ஆகியவற்றை திருடிவிட்டு வீட்டின் பின்புறம் வழியாக வெளியே சென்று தப்பி ஓடிவிட்டார்கள். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆதார் கார்டு மற்றும் பல்வேறு கார்டுகளையும் அதை வைத்திருந்த பைகளையும் தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் காட்டுப்புத்தூர் போலீஸ் சரகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் பல நடைபெற்று வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காட்டுப்புத்தூர் போலீஸர் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்கவும், மேலும் திருட்டு நடக்காமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Https://www.threads.net/@trichy_vision

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *