மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி மேலத்தெருவில் வசித்து வரும் விவசாய தொழிலாளி சிலம்பரசன் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 16 சவரன் நகை மற்றும் ரூ. இரண்டு லட்சம் ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் நிகழ்விடத்தில் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே. பெரிய பட்டி மேலத் தெருவில் வசிப்பவர் சிலம்பரசன் – 55 , விவசாயியான இவர் மேலும் மோட்டார் ரீவைண்டிங் ஒர்க் செய்து வந்த நிலையில் மோட்டார் வேலை செய்வதற்காக தோட்ட பகுதிக்கு சென்றுள்ளார்.அவரது வீட்டில் இருந்தவர்கள் அருகில் இருந்த தோட்டப்பணிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் அவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பூட்டை அருகில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்துஉள்ளே புகுந்து பீரோவின் மேலே இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து பத்து பவுன் மதிப்புள்ள 2 செயின்கள் மற்றும் 2 கிராம் எடை கொண்ட 16 மோதிரங்கள் மற்றும் ஒரு பவுன் செயின் மொத்தம் 16 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர் .
(சிலம்பரசன் தனது மகளின் திருமண தேவைக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் ஆகும் )
தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments