அய்யோ கிழிந்த நோட்டா என்ன செய்வது திகைக்க வேண்டாம் !!
ஏடிஎம்மில் இருந்து கிழிந்த நோட்டுகள் வந்திருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும், அதனை எவ்வாறு மாற்றம் செய்யலாம் என்பதை அறிவோமா...
ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றால், பலமுறை கிழிந்த நோட்டுக்கள் வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த நோட்டு செல்லுமா இல்லையா என்று நீங்கள் பதற்றமடைவீர்கள் ஏன் எல்லோருக்கும் இது இஅய்ல்பான ஒன்றுதான் சரி அது செல்லவில்லை என்றால், அதை எப்படி மாற்றுவது போன்ற குழப்பங்கள் வருவதை தவிர்க்க மமுடியாது. இந்த சூழ்நிலையில் நீங்கள் கவலைப்படத்தேவையேயில்லை, அந்த நோட்டை நீங்கள் வங்கிக்கு கொண்டு சென்று வேறு நோட்டை மாற்றிக்கொள்ளலாம்.
கிழிந்த மற்றும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. இதன்படி ஏடிஎம்மில் இருந்து வழங்கப்படும் சிதைந்த நோட்டுகளை மாற்ற எந்த ஒரு வங்கியும் மறுக்க முடியாது. இந்த நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ள எவ்வித கூடுதல் கட்டணம் இல்லை. ஆர்.பி.ஐ அறிக்கையின்படி, ஒரு வங்கி நோட்டுகளை மாற்ற மறுத்தால், அதற்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, ஏடிஎம்மில் இருந்து வெளிவரும் அனைத்து கிழிந்த மற்றும் பழைய மற்றும் போலி நோட்டுகளுக்கும் வங்கியே பொறுப்பு.
என்ன உங்கள் அருகில் உள்ள கிளைக்குச் சென்று உடனே மாற்றிக்கொள்ளுங்கள் !!.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision