தமிழக அரசின் நிறுவனமான டான்செம் மற்றும் டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான இமயம் பொறியியல் கல்லூரி இணைந்து ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்தவிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் டான்சென் நிறுவனம் உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலை வாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து டான்சென் மாணக்கர்களை வேலையில் அமர்த்தும் பணியை டான்சென் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. அதன் முற்பகுதியாக திருச்சி மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் பயின்ற ஐ.டிஐ,பாலிடெக்னிக் டிப்ளமோ,பொறியியல் பட்டதாரி,ஹோட்டல் மேனேஜ்மென்ட்,செவிலியர்கள்,மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாமை வருகின்ற ஏப்ரல்-16.05.2025 அன்று நடத்த இருக்கிறது. காலை 8:30 மணிக்கு தொடங்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்படும். அதில் வெற்றி அடைந்த இளைஞர்களுக்கு அன்றே
வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும். வேலைவாய்ப்பு நடைபெறும் இடம்:
இமயம் பொறியியல் கல்லூரி,துறையூர் நாமக்கல் சாலை, கண்ணூர்,துறையூர்
திருச்சி மாவட்டம் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து நேர்காணல் நடத்தவிருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் விவரங்களுக்கு
மின்னஞ்சல்:gcc.tansam@gmail.com
தொடர்பு எண்கள் : 8695881001/9566359960/8681878889/9514838485
இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments