திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தலைமையில் இன்று (10.12.2025) மனித உரிமைகள் தின உறுதி மொழியினை, அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
மனித உரிமைகள் தின உறுதிமொழி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான் கவியரசு, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments