Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கானோர் தேர்வு

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில நகர்ப்புற ஊரக/வாழ்வாதார இயக்கம் இணைந்து 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜமால் முகமது கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 413 வேலை நாடுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பணி ஆணைகளை வழங்கி பாராட்டினார்.
இம்முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற 1740 ஆண்கள், 1419 பெண்கள் (36 மாற்றுத்திறானளிகள் உட்பட) 3159 நபர்கள் கலந்துகொண்டனர். 166 தனியார்துறை நிறுவனங்கள் (13 திறன் பயிற்றுநர்கள் உட்பட) கலந்துகொண்டு, நேர்காணல் நடத்தினர். ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச திறன் பயிற்சிக்கு 148 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 413 (7 மாற்றுத்திறனாளிகள் உட்பட) வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர். 454 வேலைநாடுநர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன், அவர்கள், மண்டல தலைவர் திரு.மதிவாணன், மகளிர் திட்ட இயக்குநர் திரு.சுரேஷ், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் திரு.அருள், மண்டல இணை இயக்குநர் திரு.அருணகிரி, துணை இயக்குனர் திருமதி.ஐ.மகாராணி, ஜமால் முகமது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி.அ.கா.காஜா நஜீமுதீன் அவர்கள், முதல்வர் முனைவர்.து.இ.ஜார்ஜ் அமலரெத்தினம் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.பீர்பாஷா, அரசு அலுவலர்கள், தனியார்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *