திருச்சியில் ஆயுள் சான்று கொடுக்க அலையும் நூற்றுக்கணக்கான முதியவர்கள்!

திருச்சியில் ஆயுள் சான்று கொடுக்க அலையும் நூற்றுக்கணக்கான முதியவர்கள்!

திருச்சி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவுசெய்த 60வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு கிடைத்து வந்த மாதம் ரூ1000 ஓய்வூதியம் கடந்த 2 மாதமாக அவரவர் வங்கிகணக்கில் வரவுவைக்கப்படவில்லை.

உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 10 மாதமாக வரவுவைக்கப்படவில்லை.இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் வருடாந்திர ஆயுள்சான்றினை நேரில் வழங்கவேண்டுமென்றும் திருச்சியின் பல்வேறு பகுதியினர் பேருந்து வசதி குறைவான விலையிலும் திருச்சி மாவட்ட நல வாரிய அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வது அவருடைய பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக உள்ளது.

60வயதை கடந்தவர்கள் கொரோனா தொற்று காலத்தில் வெளியில் வரக்கூடாது என்கிற தமிழக அரசின் உத்தரவு பின்பற்றப்படாத நிலையுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆயில் சான்று வழங்க காலத்தை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.