திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து வந்த மனைவியை அரிவாளுடன் துரத்தி துரத்திவெட்டிய கணவன் 22 நாட்களுக்கு பிறகுதிருவெறும்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திமாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்தி ஜீவா என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்கள் இருவருக்கும் மூன்றரை வயதில் ஒரு ஆண் மகனும் 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சக்திஜீவா தனது தாயார் வீட்டில் தங்கி வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1ம்தேதி மாலை வீரமணி கையில் அரிவாளுடன் வந்து தனது மனைவியைதுரத்தி துரத்தி சரமாரியாக கொலைவெறியுடன் அருவாவில் வெட்டினார்.
இதில் சக்கி ஜீவாவிற்கு கழுத்து , இடுப்பு, கைகளில் வெட்டுப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிந்த திருவெறும்பூர் போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்திய வீரமணியை தேடி வந்தனர்.
இதற்கு இடையே சக்தி ஜீவாவை வீரமணி துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வீரமணியை திருவெறும்பூர் போலீசார் தொடர்ந்து தேடி வந்து நிலையில் திருச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் வீரமணி தங்கி இருந்த பொழுது அவனை கைது செய்தனர்.பின்னர் வீரமணியை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments