Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காற்றை தேடினேன்.. மரங்களை வெட்டிவிட்டு.. தண்ணீரை தேடினேன் கிணற்றை மூடிவிட்டு!

எண்ணிலறியா தனித்துவம் கொண்டு தனக்கென்று ஒரு நிறத்தினை வெளிப்படுத்தாத
தன்னிலை மாறாமல்தாகம் தீர்த்த விலைமதிப்பில்லாத தண்ணீரையும் சும்மா தானே
கிடைக்குதுன்னு விற்பனையில் லாபம் தேடும் மனிதனின் தேடலே இன்று தாகம்
தீர்க்கவும் தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நண்பரே! சும்மா தானே இருக்கோம் சும்மா கொஞ்சம் யோசித்து தான் பாருங்களேன் நம்
முன்னோர்களுக்கு படிப்பறிவு இல்லையெனினும் பகுத்தறிவு அதிகம் நண்பர்களே! ஒரு
வீடு கட்டுவதற்கு முன் கிணறு வெட்டுவது வழக்கமாக இருந்தது அன்றைய பகுத்தறிவு
வீட்டை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பே
இருக்கும் கிணற்றை மூடுவது இன்றைய படிப்பறிவு. ஒரு சின்ன விஷயம் தான்
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் நண்பர்களே! அன்றெல்லாம், ஒவ்வொரு வீட்டின்
பின்புறம் வாழை, சீதாமரம் , கொய்யாமரம், முருகைமரம் மாங்காய் மரம், பப்பாளி
அதே வீட்டின் முன் வேப்பமரம் , வேலிகாத்த முள் செடி, அதில் படர்ந்தபடி
கோவைக்காய், பாவக்காய் , அதுமட்டுமின்றி கீரைகள் மணத்தக்காளி, துளசி,
பொன்ணாங்கணி இப்படி சில கீரைகளும், காய்கறிகளும், பழவகைகளும் பூச்செடிகளும்
வீடே செழிப்புடன் இருந்தது. இந்த சூழலில் கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி தான்
சமைத்து சாப்பிடவேண்டும் என்ற நிலை மிகவும் குறைவு. சில நேரங்களில் வீட்டில்
உள்ள மரங்கள் தரும் பழங்களே உணவாகி விடும். விலை கொடுத்து வாங்கினால் கூட
இன்று மருந்து இல்லாத பழங்கள் கிடைப்பதில்லை.
இன்று நாகரீகம் என்ற பெயரில் நாம் விலை கொடுத்து வாங்கி அருந்தும் தண்ணீரில்
தண்ணீர் நிறுவனங்கள் என்ற இயந்திரங்களால் அனைத்து தாது சத்துக்களும்
அளிக்கப்பட்டு எவ்வித சத்துமில்லாத தண்ணீரை பருந்துகிறோம் நண்பர்களே சரி மினரல்
வாட்டர் தான் இப்படி என்று R.O purify Water என்ற கருவிகள் மூலம் சுத்தப்படுத்தி
குடிக்கும் தண்ணீர் ஆரோக்கியம் என்று நினைக்கும் நம் மக்களின் கவனத்திற்கு R.O.
பயன்படுத்தி வரும் வீடுகளில் இருப்பவர்கள் சொந்த காசில் சூனியம் வைத்து
கொள்ளுவதற்கு சமம் என்று கூட சொல்லலாம் நண்பர்களே
இதில் பயன்படுத்தி வரும் filter தண்ணீர் உள்ள தாது பொருள்களை உறிஞ்சி விட்டு
வெறும் சப்பை தண்ணீரை தருகிறது. சில நாட்கள் கழித்து இந்த Filter எடுத்து பாருங்கள்
நண்பர்களே பழுப்பு நிறம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் அதை தட்டினால்
எவ்வளவு அழுக்கு தூள்கள் உதிர்கிறது என்று கவனியுங்கள். இவ்வித தண்ணீரை
குடித்தால் நம் வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத நோய்களை விலை கொடுத்து
வங்கியுள்ளோம் என்ற உண்மை உங்களுக்கே புரியும். தண்ணீர் உள்ள தாது பொருட்கள்
தரும் பயன்கள் நம் ரத்தம் சுத்தகரிக்கப்பட்டு அசுத்த தன்மையை அழித்து நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும். பூமியில் இருந்து நேரடியாக கிடைக்கும் சாதாரண தண்ணீர் தான்

தாது சத்துக்கள் நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையது. இதை
இயற்கையான முறையில் மண்பானையில் வைத்து அருந்துவதால் தண்ணீரை
சுத்தப்படுத்தி மண்ணின் சத்துக்கள் நமக்கு கிடைக்க பெரும்.
செம்பு பத்திரங்களில் வைக்கப்படும் தண்ணீர் பருகி வந்தால் இன்னும் சிறப்பு தண்ணீரின்
தாது சத்துடன் செம்பின் உலோக தன்மையும் சேர்த்து அருந்துவது மிகவும் நன்மையை
தரும். இப்படி இயற்கை வழி முறையில் தண்ணீரை சுத்தப்படுத்தி அருந்துங்கள். இதை
விட்டுவிட்டு சுத்தமான தண்ணீரீல் உள்ள தாது பொருள்கள் அழிப்பததற்கு R.O. போன்ற
கருவியை வாங்க விளம்பரத்திற்கு நீங்கள் விலை போகாதீர்கள்
பகுத்தறிவு அள்ளித்தந்த பொக்கிஷத்தை படிப்பறிவு அழித்து விட்டது. காற்றை தேடினேன்
மரங்களை வெட்டிவிட்டு தண்ணீரை தேடினேன் கிணற்றை மூடிவிட்டு மண்ணில் இடம்
தேடினேன் நிலத்தை விற்றுவிட்டு இல்லாததை.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *