திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம், புதூர்பாளையம், விரகாலூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமாகா வேட்பாளர் தர்மராஜ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது..
கடந்த 15 ஆண்டுகளாக லால்குடி தொகுதி லால்குடி தொகுதி திமுக வசம் இருந்தது. ஆனால் தொகுதியில் எவ்வித முன்னேற்றம் இல்லை. எனவே லால்குடி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். மேலும் இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாய சம்பந்தப்பட்ட தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.


பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்ற லால்குடி தொகுதியை வரும் 5 ஆண்டுகளில் மக்களில் ஒருவனாக முன்னோக்கி எடுத்துச் செல்வேன்.லால்குடி தொகுதி அதிமுக விற்கு ஒதுக்கீடு செய்து வேட்பாளரை அறிவித்த பின்னர் அதனை வாபஸ் பெற்று தமாகா கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அதில் வேட்பாளராக களத்தில் உள்ளேன். இதனால் அதிமுக கூட்டணி கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை அதிமுக அமைச்சர் முதல் மாவட்ட செயலாளர் நகர ஒன்றிய நிர்வாகிகள் என அனைவரும் இணைந்து செயல்படுகிறோம்.

மேலும் நான் லால்குடி பகுதியைச் சேர்ந்தவன்.அடிக்கடி லால்குடி பகுதிக்கு வந்து செல்லக்கூடியவன். எங்களுக்கு சொந்தமான திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம் வரை பேருந்து ஓடுகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை லால்குடி தொகுதியில் தான் உள்ளது.

இதற்கெல்லாம் நான் லால்குடிக்கு வந்து செல்வேன் என்ன பேசினார்.
    இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தமாகா நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           52
52                           
 
 
 
 
 
 
 
 

 27 March, 2021
 27 March, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments