திருச்சிக்கு வருகை தந்த நடிகர் சூரி செய்திகளை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்…… விடுதலை 2 படம் கமர்சியலை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது.
விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும். சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை -2 படத்தை பாருங்கள். இந்த படத்துக்கு மக்கள் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை-3 எடுப்பது குறித்து பார்ப்போம்.
அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை-2ல் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன். விடுதலை 2 படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளிவருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும்.
நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments