கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்ட IEEE கிளை மாணவர் சங்கம் 

கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்ட IEEE கிளை மாணவர் சங்கம் 

தி.குணநிலா

திருச்சி ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு துறை சார்பில் IEEE கிளை மாணவர் சங்கம் (institute of electricand electronic engineering IEEE PES IEEE WIE IEEE APS IEEE. Robotics and automation society )நேற்றையதினம்(17.02.2021) தொடங்கப்பட்டது தொடக்க விழாவை கல்லூரியின்EEE துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் K. தயாளினி அவர்கள் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார் .

பின்னர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் D .சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை வழங்கி விழாவை தொடங்கி வைக்க , விழாவின் சிறப்பு விருந்தினர்களாக.
IEEE  மெட்ராஸ் பிரிவின்  துணைத்தலைவர்  டாக்டர்  ஆர் .ஹரிபிரகாஷ் கூடுதல் பதிவாளர், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை. கலந்துகொண்டு EEEஉறுப்பினர்கள் நலம் எனும் தலைப்பில் கருத்தரங்கு உரை நிகழ்த்தினர் .இவ்வமைப்பின்  நோக்கம் பற்றிய பல்வேறு தகவல்களை அவர் விவரித்தார்.
  இவ்விழாவினை குறித்து  துறையின் தலைவர் டாக்டர் கே.தயாளினி அவர்கள் பேசியபோது,
 இவ்வமைப்பானது 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 5 ஆண்டுகளாக என் கல்லூரியில் இவை வெகு சிறப்பாக மாணவர்களின்  ஆர்வத்தின் பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த ஆண்டிற்கான நிகழ்வுகளின் தொடக்கவிழா தான் இன்றைய தினம் நடைபெற்றது இவ்விழாவில் 2021 ஆம்கல்வியாண்டிற்கான  அலுவலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  அறிமுகப்படுத்தப்பட்டனர் .

மேலும் இந்த ஆண்டு பல்வேறு விதமான நிகழ்வுகள் மூலம் மாணவர்களுக்கு இந்த இயந்திர உலகை பற்றிய ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM