இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், எனக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி. அதனை தமிழகம் மட்டுமல்லாது நாடுகடந்த முஸ்லிம்கள் அனைவரும் வரவேற்று, பாராட்டியுள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்த காரியங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வரும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் எதாவது 5 தொகுதிகளை கேட்போம். கேட்கும் இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், அவற்றை ஒதுக்கி கொடுக்கும் இடத்தில் திமுக வும் இருக்கிறது. நாங்கள் கேட்பதை மட்டுமல்ல கேட்காததையும் திமுக தலைமை கொடுக்கும்.நான் இலங்கை சென்று அந்நாட்டின் பிரதமரை சந்தித்து பேசினேன். ஒருதாய் மக்கள் என்ற உணர்வுடன் அன்டைநாடுகள் இருக்க வேண்டும் என்பதை இலங்கை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தியா-இலங்கை ஆகிய இருநாட்டு மீனவர்கள் இடையே நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டார்.
மேலும், இந்தோ ஸ்டிலங்கா மீன்வர் கழகம் என்ற நிறுவனத்தை இருநாடுகள் கூட்டாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதனால் இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பெருகுவதோடு பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
அதனை இலங்கை பிரதமர் ஏற்றுக்கொண்டார். எங்களது கோரிக்கையை அவர் இந்திய அதிகாரிகளிடம், அமைச்சர்களிடமும் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி விவகாரத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கருத்து கேட்டு அதில் மாற்றம் செய்துள்ளார்கள். இதை பலர் வரவேற்றுள்ளார்கள். இதே நடைமுறையை கல்வி கொள்கையில் ஏன் செய்யவில்லை. ஜி.எஸ்.டியில் பின்பற்றிய கலந்தாய்வு போல ஒவ்வொரு திட்டத்திலும் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து பேசி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.
திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது அது வெற்றி பெறும்.
அதிமுகவும் பா.ஜ.க வும் கூட்டணி வைத்துள்ளார்கள் அவர்களோடு த.வெ.க கூட்டணி வைக்கும் என செய்திகள் வருகிறது.
2026 தேர்தலில் மூன்று அணியாக இருக்கும் போல தெரிகிறது.
அதிமுக – பா.ஜ.க – த.வெ.க கூட்டணி அமைந்தால் போட்டி கடுமையாக இருக்கும். தேர்தல் என்பதே சவால் தான்.
விஜய்க்கு கூட்டங்கள் சேர்கிறது கூட்டங்களை வைத்து அரசியலில் எதையும் முடிவு செய்ய முடியாது. அது தேர்தலில் பிரதிபலிக்காது.
திமுக ஆட்சியை மக்கள் வரவேற்று ஆதரவு தெரிவிக்கிறார்கள். நிச்சயமாக எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். இது யூகம் அல்ல நம்பிக்கை என்றார் காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
அதிமுக,பாஜக, தவெக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும், சீமான் ஒரு அணியாகவும் போட்டியிட வாய்ப்புள்ளது. ஒருவருக்கு கூட்டம் கூடுவதை வைத்து தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை தீர்மானிக்க முடியாது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments