திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ராஜா
உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்சனை குறித்து ஒரு நல்ல தீர்ப்பை இறுதி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மாநில அரசு இதனை ஏற்ற தைமாசத்தை பூசம் ஒட்டி கார்த்திகை தீபம் ஏற்றலாம். முருகப்பெருமானின் தீப சம்பத்தை பிணம் புதைக்க கூடிய அரக்க குணத்துடன் சட்ட அமைச்சர் பேசியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காலமான பொழுது கண்ணம்மா பேட்டை க்கு போகாமல் ஏன் கடற்கரைக்கு போனீர்கள் என்ற கேள்வி வருகிறது ல இதுவரை நான் கேட்கவில்லை.

நாக்கு தடித்து பேசுவது இந்து விரோதமாக பேசினால் பெரிய கிரெடிட்டி என அமைச்சர்கள் ரகுபதி சேகர் பாபு பேசுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இதுவரை இருந்தது அதிமுக திமுக கூட்டணி இருந்தது. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது பாமக தற்போது கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் சிலர் சேரலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுகவுடன் கூட்டணியில் விஜயின் வருகையால் பாதிக்கப்படக்கூடிய கட்சிகள்

விடுதலை சிறுத்தைகள் , காங்கிரஸ் . ஆட்சி,அதிகாரத்தில் பங்கு இல்லை என்றால் தவெக உடன் செல்லலாம் என காங்கிரஸ் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது 2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை நோக்கி செல்கிறது.

ஜனநாயக பட விவகாரத்தில் சென்சார் போர்டு தனி அதிகாரம் பெற்ற வாரியம். காங்கிரஸ் எப்பவுமே கத்திய முதுகு பின்னாடி வச்சிக்கிட்டே பேரம் பேசக்கூடிய பழக்கம் உள்ளவர்கள். பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் அதிகாரத்தை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்த மாட்டோம்.
ஜனநாயக பட விவகாரம் மற்றும் விஜய்க்கு பாரதிய ஜனதா நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால் செப்டம்ர் 27ஆம் தேதியே கொடுத்திருப்போம். மனிதாபிமானத்துடன் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். பிஜேபி நெருக்கடி கொடுத்திருந்தால் அவர் வெளியில் வந்திருக்க முடியாது. எப்பொழுதும் நாங்கள் ஒருவருடைய பலகீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கவில்லை. சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் நீதிமன்றம்

கூறியுள்ளது சம்பவம் நிகழ்ந்த பொழுது விஜய் அந்த இடத்தில் இருந்துள்ளார் அதனால் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படத்திலும் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்பது சென்சார் போர்டு முடிவெடுக்கும்.

திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் 40க்கும் மேற்பட்ட இந்தி சொல்லி கொடுத்து பள்ளிகளை நடத்துகிறார்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
ஹிந்தி எதிர்ப்பு திமுக குடும்பத்திலேயே எடுபடவில்லை.
தமிழ்நாடு மக்களிடமே எடுபட போகிறதா எடுபடாது என குறிப்பிட்டார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments