Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

ட்ரெண்டிங் உலகில் மாற்றி யோசித்தால் வெற்றி நமக்கே!

சூழலுக்கு உகந்தது என்பினும் சூப்பராக இல்லை என்ற காரணத்தினால், கல்யாணங்களின் ரிட்டன் கிப்டுகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஜூட் பேக்குகளுக்கு, ட்ரெண்டி லுக் கொடுத்து ‘வாவ்’ சொல்லும் வகையில் மாத்தியோசித்து சணல் பையில் சக்ஸஸ் கண்டுள்ளார் புவனேஸ்வரி. “காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களுடைய தேவைகளும், விருப்பங்களும் மாறிட்டேதான் இருக்கும். மக்களுடைய தேவை என்ன என்பதை தெரிந்து அதுக்குத் தகுந்த மாதிரி நம்ளோட பிசினஸை அப்டேட் பண்ணிக்கிட்டா வெற்றி நமக்குத்தான். அதுதான் என்னுடைய வெற்றிக்கான காரணமும் கூட” என்று பேச ஆரம்பித்தார் புவனேஸ்வரி 

 சணல் பைகள் தயாரிப்பை தன்னுடைய பிசினஸாகக் கொண்டுள்ள புவனேஸ்வரி அவற்றை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும், அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார். என்னுடைய சிறு வயதில் இருந்து ஆர்ட் அண்ட் கிராப்ட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அப்படி பார்த்து அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம் ..திருமணத்திற்கு பிறகு என்னுடைய தனித்திறமை மீது என் கணவர் வைத்த நம்பிக்கை இன்று என்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறது. இமிடேட் ஜுவல்லரி செய்ய தொடங்கினேன் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு இன்று சணல் பை தயாரிப்பில் எனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறேன்.  25 ஆண்டுகளாக இதை செய்து வந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக சங்கமா கலெக்க்ஷன் என்ற பெயரில் நிறுவனமாகவே மாற்றி புவனேஸ்வரி என்டர்பிரைசஸ் என்று எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறேன்.

இப்போது வரை மொத்த விற்பனையாக செய்வதைதாண்டி மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து கொடுத்து வருகிறேன். பைகள் தயாரிப்பது நகைகள் தயாரிப்பதோடு இதை பல பெண்களுக்கும் இலவசமாக அரசுடன் இணைந்து கற்றுத் தருகிறேன் இதன் மூலம் பல பெண்களையும் தொழில் முனைவோராக உருவாக்கி வருகிறேன். என்னதான் ட்ரெண்டிங் ஆக செய்து வந்தாலும் இன்றைய விற்பனை உலகம் இணையம் வழியாகவே நடைபெறுகிறது எனவே இன்ஸ்டா பக்கங்களையும் அதற்கு ஏற்றவாறு பயன்படுத்த தொடங்கியுள்ளேன். https://www.instagram.com/_sangama_collection_?igsh=MXdscjE4YWwxZzd4Mw திறமையும், தன்னம்பிக்கையும் இருப்பவர்களுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதே என் வாழ்வில் கிடைத்த அனுபவம் 50 வயதிற்கு மேலாகியும் இதன் மீதுள்ள ஆர்வமே என்னை பயணிக்க வைக்கிறது என்கிறார் புவனேஸ்வரி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *