2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, இன்று (15.03.2026) மாலை 4.00 மணி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையில், ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

திருச்சி மாவட்ட (ஊரகம் மற்றும் மாநகரம்) ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள் (பரிசீலனை குழுவால் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர), தங்களது ஆயுதங்களை அந்தந்தப் பகுதி காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆயுதக் கிடங்கிலோ உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
காலக்கெடு: தேர்தல் அறிவிக்கப்பட்ட 15.03.2026 முதல் 7 நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைத்து ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

தடை: உரிமம் பெற்ற ஆயுதங்களை பொது இடங்களுக்கு எடுத்துச் செல்லவோ அல்லது காட்சிப்படுத்தவோ முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பிப் பெறுதல்: தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு, தங்களது ஆயுதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
நடவடிக்கை: ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது BNSS பிரிவு 163-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பான மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments