திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி பிரிவின் மாநில செயலாளர் சூரியசிவா வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில சிறுபான்மையினர் பிரிவின் செயலாளர்… தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு மாற்றத்திற்காக தயாராக இருக்கிறார்கள் இந்த தேர்தல் முடிவில் அது கண்டிப்பாக தெரியும். 400 இடங்களைப் பெற்று மீண்டும் மோடி பிரதமராக ஆட்சி அமைப்பார்.

தமிழகத்திலிருந்து குறைந்தது 10க்கும் மேற்பட்ட பாரதி ஜனதா கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு வலுசேர்ப்பார்கள். திருச்சி பெறுத்தவரை எந்த கட்சியினரும் வாக்குக்கு பணம் செலுத்தவில்லை திமுகவை சேர்ந்த துரை வைகோ மட்டுமே ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார். திராவிட கட்சிகள் பணத்தை வைத்து வாக்கை வாங்கலாம் என்ற எண்ணம் போய்த்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பணம் வேண்டாம் என்று புறக்கணித்து உள்ளனர். தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்குக்கு பணம் வழங்கவில்லை. பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். கோவையில் ஜி-போ மூலமாக பாரதிய ஜனதா கட்சியினர் பணம் கொடுத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு… தேர்தல் ஆணையத்திடம் அப்படி புகார் கொடுத்துள்ளனர். இவர்களே இவ்வளவு தெளிவா கொடுக்கும் போது நாங்கள் ஜி-பேயில் கொடுப்போமா, கொடுக்க வேண்டும் முடிவு செய்தால் எப்படி வேண்டாலும் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

கோவையில் நான் பிரச்சாரம் செய்த போது பூத் சிலில் கொடுக்கும் போதே பணத்தை திமுகவினர் கொடுத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments