திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியில் போதைக்காக தடை செய்யப்பட்ட பவுடர்கள் சிலர் விற்பதாக வந்த தகவலையடுத்து எஸ்.பி தனிப்படையினர் மஞ்சம்பட்டி பாலம் அருகில் சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவலர்கள் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட கோக்கேன், எம்.டி.எம்.ஏ, பவுடர், டிஸ்ட்டில் வாட்டர் பாட்டில்கள், ஊசிகள், பவுடரை எடை பார்க்கும் மிஷின் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பிடிபட்ட போதை பொருட்களையும், விற்ற நபர்களையும் காட்சிப்படுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்… தடை செய்யப்பட்ட போதை மருந்துடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி ராமலிங்கம் நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் நல்லுசாமி (41). இவர் கல்லூரி பேராசிரியர், சேலம் மாவட்டம் மேட்டூர் காமராஜர் நகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் ஸ்ரீ விக்ரமன் (32),
வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த புண்ணியகோடி மகன் ரூபன் (31) வழக்கறிஞர் ஆகிய மூன்று பேரும் போதைப் பொருட்கள் பயன்படுத்தி வந்ததும், விற்பனை செய்ததும் தெரிய வந்ததது. மேலும் போதைப் பொருள்கள் அனைத்தும் முகநூலில் (கிரைண்டர் ஆப்) என்ற வலைதளங்கள் மூலமாக இணைந்து ஒரின சேர்கைக்காவும், போதை பவுடரை பயன்படுத்தி பின்னர் விற்பனை செய்ததும் தெரிய வந்தது என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments