இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் பூசாரிகள், பட்டாச்சார்யார்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா கால நிவாரண உதவியாக நான்காயிரம் ரூபாய், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நடைப்பெற்றது.

இதில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்… ப்ளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி 10ம் வகுப்பு ப்ளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள், பள்ளி கல்வித் துறையிடம் உள்ளது.

எனவே, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு, அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது எளிதானது. விரைவாக ப்ளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்படும். கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

3வது அலை வரும் என கூறுகின்றனர் எனவே, ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதலமைச்சரிடம் ஆலோசனை செய்த பின் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           127
127                           
 
 
 
 
 
 
 
 

 28 June, 2021
 28 June, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments