பெல் (BHEL) நிறுவன வளாகத்தில், பெல் அனுமதியுடன் சுமார் 4000 சதுர அடியில் புதிதாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது.56 கிலோ எடையுள்ள 7 அடி உயரம் கொண்ட இந்த முழு உருவ வெண்கல சிலை,12 அடி உயரமுள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார் தலைமையில்,பத்து லட்சம் மதிப்பீட்டில், திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தில், மறைந்த தமிழக முதல்வர், அதிமுக நிறுவனர், புரட்சிதலைவர் MGR அவர்களின் முழு உருவ வெண்கல சிலை இன்று 6 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்த சிலையை அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கே ற்க உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments