ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தின் 39வது பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் கவிஞர் தங்கமூர்த்தி, கௌரவ விருந்தினராக மேஜர் டோனர் ரொட்டேரியன் ஸ்ரீனிவாசன், சிறப்பு அழைப்பாளராக மாவட்டம் 3000 உடனடி முன்னாள் ஆளுநர் ரொட்டேரியன் ஜெரால்ட் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அது சமயம் சங்கத்தின் 39 ஆவது தலைவராக ரொட்டேரியன் சேஷாத்திரி, செயலாளராக ரொட்டேரியன் அறிவழகன், பொருளாளராக ரொட்டேரியன் சவுரி ராஜன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
ரோட்டரி மாவட்டம் 3000 வாகை ஆண்டின் ஆளுநர் ஐயா ரொட்டேரியன் ராஜா கோவிந்தசாமி கனவு திட்டமான குளங்கள் தூர்வாருதல், கற்றல் அரங்கம் மற்றும் குறுங்காடுகள் அமைப்பது பற்றிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என சங்கத்தின் சார்பாக உறுதி ஏற்கப்பட்டது. கழகத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments