திருச்சி புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ண நடுநிலைப்பள்ளியில் ஸ்கோப் தொண்டு நிறுவனம் சார்பில் உலகளாவிய கை கழுவும் தின விழா மற்றும் உணவு கழிவுகளை பயன்படுத்தி பயோகேஸ் (உயிர் கழிவிலிருந்து பெறப்படும் வாயு) தயாரிக்கும் பிளான்ட் தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர்கள் எ. ஜோசப் அந்தோணி மற்றும் பி. அர்ஜுன் ஆகியோர்கள் முன்னிலையில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 பப்ளிக் இமேஜ் டிஸ்ப்ளே சேர்மேனுமான மேஜர் டோனர் டாக்டர். கே.சீனிவாசன் பயோ கேஸ் பிளாண்ட் மற்றும் காலால் மிதித்து தண்ணீர் வரும் நவீன இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் திருச்சி ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குனர், பத்மஸ்ரீ டாக்டர். எம். சுப்புராமன் ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர். ஏ .சமீர் பாஷா ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயோ பிளான்ட் தொடங்கி வைத்தனர். திருச்சிராப்பள்ளி  மிட் டவுன்  ரோட்டரி கிளப் திருநாவுக்கரசு, துளசி பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாணவர்கள் சாப்பிட்டது போக மீதம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் மற்றும் பல்வேறு வீணான பொருட்களை பயன்படுத்தி கேஸ் (gas ) உருவாக்கி அதை சமையலுக்கு பயன்படுத்தும் நவீன உத்தியை கையாண்டு சிறப்பான சுற்றுச்சூழல் அமைப்பதற்கு இம்முறை ஏதுவாக இருக்கும் என இம்முறை திட்டத்தை பற்றி விளக்கினார்கள்.
முன்னதாக அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் T .வேத நாராயணன் வரவேற்பு ரையாற்றினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியர்  V.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments