Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ₹4.75 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு; புதிய சமுதாய கூடத்திற்கு பூமிபூஜை – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.53க்குட்பட்ட பாரதிதாசன் சாலை குறுக்கு சாலையில் பல்நோக்கு அலுவலக கட்டிடம் பொது நிதியில் ரூ. 219 .05 இலட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு, பல்நோக்கு அலுவலக கட்டடம் மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 14.00 இலட்சத்தில் ராஜா காலனியில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை, பொது நிதியின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் 55 வது வார்டில் காந்திநகர் சேட்டு காலனியில் பல்நோக்கு அலுவலக கட்டடம், பொது நிதியின் கீழ் 18.60 இலட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தையும் கே.என். நேரு அவர்கள் திறந்து வைத்தார்.

முன்னதாக 28வது வார்டு அண்ணா நகர் 4 -வது குறுக்கு தெருவில் பொது நிதியின் கீழ் ரூ25.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு அலுவலக கட்டடம் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.173.00 இலட்சம் மதிப்பீட்டில் 22வது வார்டு வாமடத்தில் 5917.00 சதுர அடியில் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட சமுதாய கூடம் அமைக்கப்படுகிறது.

இதில் தரை தளத்தில் 200 நபர்கள் அமரும் வசதி கொண்ட உணவு கூடம், சமையல் அறை, இருப்பறை மற்றும் கழிப்பறை வசதிகளும் முதல் தளத்தில் 200 நபர்கள் அமரும் வசதி கொண்ட அரங்கம் விழா மேடை மற்றும் இரண்டு அறைகள் அடங்கிய வசதிகள் கொண்ட புதிய சமுதாயக்கூடம் கட்ட நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன், மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *