Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் ஸ்டாலின் திட்ட முகாமில் கேட்டை பூட்டிய சம்பவம்: வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் நோட்டீஸ்

தமிழக அரசு ஏழை எளிய பொதுமக்களின் பிரச்சனைகளை போக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பல்வேறு முகாம்களை பொதுமக்கள் வகிக்கக்கூடிய இடங்களில் அனைத்து துறை அரசு அதிகாரிகளை வரவழைத்து முகாம்கள் நடத்தி தீர்வு கண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம் களை பல்வேறு அரசு துறை அதிகாரிகளை வைத்து கிராமபுரம் நகர்ப்புறங்களில் நடத்துவதற்கு அறிவுறுத்துள்ளார்.

மேலும் அப்படி நடத்தப்படும் முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 40 நாட்களில் தீர்வு கான அதிகாரிகளுக்கு அறி உறுத்தப் பட்டுள்ளது. அதன்படி அரசு அதிகாரிகள் பொதுமக்கள் வழங்கும் அணுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குவளக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 9ம் தேதி மற்றும் 10 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடந்தது.

இதில் 9ம் தேதி நடந்த முகாமிற்கு திருச்சி கலெக்டர் சரவணன் தலைமை வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார் இந்த நிலையில் தலைமை வகித்த கலெக்டரும் அமைச்சரும் முகாமை தொடக்கி வைத்து அங்கிருந்து சென்ற நிலையில்

அந்த முகாமிற்கு பொதுமக்கள் வரும் வழியை திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் அவர்கள் கேட்டை இழுத்துப் பூட்டுவதற்கு ஊழியர்களிடம் அறிவுறுத்தியதோடு ஆனந்தே அருகே நின்று கேட்டை பூட்டுவதற்கு ஆணையிட்டார்.

இச்சம்பவம் முகாமிற்கு வந்த பொது மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழியில் யாரும் வரக்கூடாது வேறுவழியில் வாருங்கள் என கூறி முகாமின் நுழைவாயில் கேட்ட இழுத்து பூட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக சமூக வலைதளம் மற்றும் சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியானது.

இந்த நிலையில் திருச்சி கலெக்டர் சரவணன் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் எதற்காக முகாமிற்கு பொதுக்கள் வரும் வழியில் உள்ள கேட்டை நீங்கள் பூட்டினீர்கள் என விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் பந்தல், சேர் உள்ளிட்டவை வாடகைக்கு எடுக்கப்படுகின்றன.

அப்படி எடுக்கப்படும் பொருள்களுக்கு உரிய வாடகைகள் உரிய நேரத்தில் செலுத்தாமல் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இழுத்தடித்து வருவதாகவும் இதனால் பந்தல் மற்றும் சேர் வாடகைக்கு விடுபவர்கள் பெரும் அவதிக்கு உல்லாதவராகவும் கூறப்படுகிறது.

இப்படி நடத்தப்படும் ஒவ்வொரு முகாமிற்கும் குறைந்தது ஒன்றரை லட்சம் முதல் 4.5 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

இப்படி மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்து அந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் பூட்டிய சம்பவம் குறித்து திருச்சி கலெக்டர் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *