திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா நாட்டின் கோலாலம்பூர்க்கு Batik Air நிறுவனத்தின் தினசரி விமான சேவையை இன்றிலிருந்து தொடங்குகிறது. கொரோனாவிற்கு பிறகு இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது.
கொரானா பெருந்தொற்றிற்கு பிறகு மற்ற விமான சேவைகள் தொடர்ந்தாலும் சில விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. அதில் Batik malaysia நிறுவனத்தின் திருச்சி டு மலேசியா செல்ல கூடிய தினசரி பகல்நேர சேவையை நிறுத்தியிருந்தது. இரவு நேர சேவையை மட்டும் தொடர்ந்த நிலையில், தற்போது இன்றையிலிருந்து பகல்நேர சேவையவும் தொடங்கியுள்ளது.
இதனால் திருச்சியிலிருந்து கோலாலம்பூர் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 34 என்று அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் அதிகமான விமான சேவை வழங்கும் விமான நிலையங்களில் முதலிடத்தில் இருக்கிறோம். இதனால் மக்களுக்கு எளிதாக கோலாலம்பூர் செல்ல முடியும், அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிக பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவதால் இந்த மாதத்தில் தொடங்கப்பட்டுள்ள சேவை மிக பயனுள்ளதாக இருக்கும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments