திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2025) சுதந்திர தின விழாவில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணி செய்த 27 மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.2000 வீதம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி, பின்னர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள் , பணியாளர்களின் குழந்தைகள் 6 மாணவ, மாணவிகளுக்கும் முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 ரொக்கமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாண்புமிகு மேயர் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய நகர் நல அலுவலர், உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 57 நபர்களை கௌவுரவித்து பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, இவ்விழாவில் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தை அருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.
மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை ஆணையர் திரு.கே.பாலு, நகரப் பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத்தலைவர்கள் திருமதி, ஆண்டாள்ராம்குமார், திரு.மு.மதிவாணன், திருமதி.த.துர்காதேவி, திருமதி. விஜயலட்சுமிகண்ணன், திருமதி.பி.ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் திரு.மா.விஜயசந்திரன் செயற்பொறியாளர்கள் திரு.கே.எஸ்.பாலசுப்ரமணியன், திரு.மா.செல்வராஜ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments