Site Logo mobile
Search Icon
Mobile Gif
Election 2021

இளைஞர்கள் படைசூழ தேர்தல் களத்தில் இந்திய ஜனநாயக கட்சி – திருச்சியில் உற்சாக வரவேற்பு

ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதற்காக 2010ஆம் ஆண்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டி.ஆர். ரவி பச்சைமுத்துவால் தொடங்கி இன்று வரை பல்வேறு சமூக செயல்பாட்டுகளோடு தேர்தல் களத்தில் பொதுமக்களை உற்சாகமாய் சந்தித்துவரும் கட்சி என்றால் அது ஐஜேகே தான்.

 Advertisement

அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாபெரும் கூட்டணியுடன் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக பிரான்சிஸ் மேரி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து நாகமங்கலத்தில் இளைஞர்கள் படை சூழ வருகை புரிந்தார். கட்சித் நிர்வாகிகள் குறிப்பாக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பி.ஆர் சுரேஷ் இளைஞர்களின் படையோடு திருச்சி மாவட்டத்தில் ஒரு மாபெரும் சகாப்தத்தை உருவாக்கி வருகிறார் என்று தான் கூற வேண்டும். இன்றைய பல இளைஞர்கள் ஐஜேகே கட்சியின் தொண்டர்களாக மாறியுள்ளதற்கு முழுமுதற் காரணமும் அவரே! 

பின்னர் பொதுமக்களிடையே பேசிய இந்திய ஜனநாயக கட்சி தலைவர்… “அரசியலில் சம்பாதிக்க நாங்கள் கட்சி தொடங்கவில்லை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது. மக்களுக்குத் தேவை இலவசமல்ல வேலைவாய்ப்புகள் தேவை.

மேலும் நாகமங்கலத்தில் சாலை வசதி, அரசு பள்ளி, சுகாதார மையம், தெரு விளக்கு போன்ற உங்கள் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கப்படும். இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி என்பது வெற்றிக்கூட்டணி.

Advertisement

மக்களாகிய நீங்கள் ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து இந்திய ஜனநாயக் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பி.ஆர். சுரேஷ் மற்றும் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *