இந்திய ஜனநாயக கட்சியின் தேசம் காப்போம்”-“தமிழை வளர்ப்போம்” மாநாடு மார்ச் 02-ஆம் தேதி நடைபெறும். ஐஜேகே பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.ஜெயசீலன் அறிவிப்பு. எதிர்வரும் 17-ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெற இருந்த இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடானது மார்ச் 2-ம் தேதி (02.03.2024 சனிக்கிழமை) மாலை 3.00 மணியளவில் ஏற்கனவே திட்டமிட்டபடி திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்பதனை ஐஜேகே நிர்வாகிகள், தொண்டர்கள், பத்திரிக்கை ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்
இந்திய ஜனநாயக கட்சி நடத்த உள்ள பிரமாண்டமான மாநில மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வதற்கு ஏதுவாக மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஐஜேகே நிர்வாகிகளும் – தொண்டர்களும் எந்த விதமான தொய்வுமின்றி. மாநாட்டுப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும் என உங்கள் அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
Comments