பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல், 100 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்பினர் நாள் தோறும் தங்கள் எதிர்ப்பை போராட்டம் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருச்சியில் பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெறக் கோரியும், மோடி அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் தினந்தோறும் பல்வேறு விதான நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 27.06.2021 திருவெறும்பூர் பேருந்து நிலையம், பெட்ரோல் பங்க் அருகில் இரு சக்கர வாகனத்தை படுக்க வைத்து மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்யும் விதமாக பறையடித்து கண்டன முழக்கம் எழுப்பி நூதன போராட்டம் நடைபெற்றது.

காட்டுர் பகுதிக்குழு தலைவர் யுவராஜ் தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதே போன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்திற்கு இறுதி ஊர்வலம், ஆட்டோவை கையிறு கட்டி இழுத்து சென்று போராட்டம் நடத்தியது குறிப்பிடதக்கது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW







Comments