Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்தியாவிலேயே முதன்முறையாக பாதுகாப்பு அலுவலர்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

No image available

திருச்சியில் 6000 பாதுகாப்புத்துறை ஊழியர்களுக்கான சிறப்பு குறைத்தீர் முகாம்.திருச்சி மன்னார்புரத்தில் வருகிறேன் 30ஆம் தேதி பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்காக பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் நடைபெற

 உள்ளது இதில் பாதுகாப்புத்துறை பென்ஷன் தாரர்களுக்கு செய்யப்பட்டுள்ள பிரத்யேக ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்புத் துறையின் கணக்கு பிரிவு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் செய்தியாளர்களை சந்தித்தார் பென்சனர்களின் பிரச்னைக்கான குறைதீர்முகாம் நடைபெறுகிறது 100க்கு மேற்பட்ட கணினிகள் அமைக்கப்பட்டு 200க்கு மேற்பட்ட அதிகாரிகள் பங்கு பெற உள்ளனர்.

ஓய்வூதியம் பெறுவதற்கு குறைகளை உடனடியாக தீர்க்கப்படும்.இந்தியாவில் அனைத்து அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து ஓய்வு பெற்ற ராணுவம் வீரர்கள் பங்கேற்கலாம்.

முகாமில் அவர்கள் பெறப்படும் பென்ஷன் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.ஒன் ராங்க, ஒன் பென்ஷன் அதில் கிடைக்கக் கூடிய அரியர் வரவில்லை என்றால் இங்கு சரி பார்த்துக் கொள்ளலாம்.இறப்புக்கு பின் வழங்கக்கூடிய குடும்ப பென்ஷன் வாரிசுகளுக்கு, பென்ஷன் சரியாக உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

வாரிசுகள் பெயர் குழப்பம் இருந்தால் மாற்றம் இருந்தாலும் இங்கு அதை சரி செய்து கொள்ளலாம்.10, 15 வருடங்கள் பென்ஷன் வாங்காதவர்கள் நேரில் வந்து உரிய தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.2012 பிறகு இரண்டு பென்ஷன் வாங்கலாம் என திருத்தம் உள்ளது. எனவே பென்ஷன் அதிகாரியிடம் இது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் 5000, 6000 மேற்பட்டவர்கள் பங்கு பெறுவதற்கான வசதிகள் உள்ளது.காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், திருச்சி மாவட்டத்தில் 6000 மேற்பட்ட பென்சனர்கள் உள்ளனர்.1.5 கோடி ரூபாய்க்கான காசோலைக்கு வழங்கப்பட உள்ளது. பென்ஷன் தொடர்பான ஆவணங்கள், ஆதார் கார்டு மற்றும் வங்கி தொடர்பான விவரங்களை கொண்டு வர வேண்டும்.இந்த முகாமுக்கு வர முடியாதவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்கு குறைதீர்க்கும் வகையில் 5நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்கு வந்து குறைகளை தீர்த்து வைப்பார்கள்.இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்தியாவிலேயே முதன்முறையாக சிறப்பு ஒரே தீர்ப்பு முகமாக நடைபெற உள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *