Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

 திருச்சி மலைக்கோட்டையும் யாழ்ப்பாணம் கோட்டையும் நேரடி விமான சேவை மூலம் இணைக்கிறது – இன்டிகோ நிறுவனம்

No image available

யாழ்ப்பாணமானது திருச்சியுடன் நேரடி இணைப்பு பெறும் 12 வது வெளிநாட்டு விமானநிலையமாகும். பொதுவாக திருச்சியுடன் இணைப்பு பெற்றுள்ள கிழக்காசிய நாடுகளுக்கான வரலாறு சோழப்பேரரசுவின் வரலாற்றுக்காவமலத்தில் இருந்து தொடங்கும். யாழ்ப்பாணத்துடனான தொடர்பு வரலாற்றிற்கும் முற்பட்டது. பண்டைய தமிழ்நாட்டுடன் பின்னிப் பிணைந்தது. 

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு செல்லும் வரை, தடைகளற்ற படகுப்பபயணங்கள் பாக் ஜலசந்தி வழியாக இரு நாடுகளுக்கிடையே இருந்தன. ஆழமற்ற பாக் ஜலசந்தி இதற்கு ஒரு முக்கிய காரணம். பூம்புகார், தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டிணம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை போன்ற பாக் ஜலசந்தியின் மேற்புறம் (வடக்கு) இருந்த அக்கால துறைமுகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன. யாழ்ப்பாணத்தை பொறுத்து அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தது வேதாரண்யம், கோடியக்கரை, தொண்டி மற்றும் இராமேஸ்வரம் ஆகும்

தமிழர்கள் யாழ்ப்பாணம் சென்றும் யாழ்ப்பாணம் மக்கள் மேற்கண்ட துனைமுக நகரங்களுக்கு வந்து வியாபாரம் செய்வதும் மிகவும் சாதாரண விசயமாகும். இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட துறைமுக நகர மக்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே கொள்வினை மற்றும் கொடுப்பிணைகளும் சாதாணமாயிற்று. உதாரணமாக திருப்பாலைக்குடி மக்கள் பெருமளவில் யாழ்ப்பாணம் மற்றும் சுற்றுப்புற மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் மணமுடித்து இருப்பர். இப்படி சாதாரணமாக இருந்த படகு, தோணிப்போக்குவரத்து பிற்காலத்தில் பிரிட்டிசார் கட்டுப்பாடுகளாலும், அதன் தொடர்ச்சியாக சிறிய துறைமுகங்கள் பயன்பாடற்று போனதாலும் படிப்படியாக குறைந்தது. நாகப்பட்டிணம் துறைமுகம் மட்டும் தாக்குப்பிடித்தது.  

இதற்கிடையில் பிரிட்டிசார் கொழும்புவை முக்கிய வியாபாரக் கேந்திரமாக மாற்றும் நோக்கில் அதை பிரபலப்படுத்தும் நோக்கில் 1880ல் மெட்ராலிஸ் இருந்து தூத்துக்குடிக்கு இரயிலிலும் பின்னர் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு கப்பலிலும் பயணிக்கும்படியான ஒரே டிக்கட் சேவையை அறிமுகப்படுத்தினர். ஆனால் அதிக தொலைவு காரணமாக இந்தப்பயணம் மிகவும் களைப்படையச் செய்யும் பயணமாக இருந்தது. பின்னர் 1914ல் இந்தியாவின் பொறியியல் அடையாளங்களில் ஒன்றான பாம்பன் பாலம் கட்டிமுடிக்கப்பட்டதால் “போட் மெயில்” என்ற இரயில் சேவையை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தது. “இண்டோ – சிலோன்” என்றழைக்கப்பட்ட இந்த இரயில் சேவையில் சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை பயணித்து அதே டிக்கட்டில் தனுஷ்கோடியில் இருந்து படகில் தலைமன்னார் சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் கொழும்புவிற்கு இரயிலில் பயணிக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான அணுபவமாக இருந்ததாலும், சுவராஸ்யமாக இருந்ததாலும் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றறது. இதனால் காலம்காலமாக யாழ்ப்பாணத்துடன் இருந்த வணிகத் தொடர்புகள் கொழும்புவை நோக்கி நகர்ந்தன. இந்நிலையில் இந்தியா சுதந்திரத்திற்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நின்று போயின. பின்னர் 1964ல் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனுஷ்கோடியே அழிந்தது எல்லாம் வரலாறு. 

பின்னர் மீண்டும் 1948 ல் இலங்கையின் விமானநிறுவனமான ஏர் சிலோன் தமிழர்களுடனான தனது தொடர்பை தனது வாராந்திர “கொழும்பு – திருச்சி” விமானசேவை மூலம் உயிர்ப்பிக்கிறது. தமிழர்களின் கோரிக்கையை ஏற்று 1949ல் தனது சேவையை யாழ்ப்பாணத்திற்கு விரிவுபடுத்துகிறது. கிட்டத்தட் 30 ஆண்டுகள் தடையின்றி நடந்த “திருச்சி – யாழ்ப்பாணம்” நேரடி விமானசேவையானது விமானநிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் முதலீட்டாளர்கள் விலகல் காரணமாக 1978ல் தடைபடுகிறது. பின்னர் 1980ல் இலங்கை அரசாங்கம் “ஏர் லங்கா” விமானநிறுவனத்தை தொடங்கி திருச்சிக்கும் தனது சேவையை மீண்டும் துவங்கிறது. இம்முறை கொழும்புவிற்கு மட்டுமே சேவை தொடங்கப்படுகிறது. ஏனெனில் ஏர் லங்கா விமானங்கள் யாழ்ப்பாணம் விமானநிலைய ஒடுதளத்தில் இறங்க முடியாத அளவிற்கு நீளம் குறைந்தது யாழ்ப்பாண விமானநிலைய ஓடுதளம். பின்னர் 1980 களில் தொடங்கிய தமிழ் ஈழம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக கிட்டத்தட்ட தமிழ்நாட்டிற்கும் யாழ்ப்பாணத்திற்குமா தொடர்புகள் அனைத்துமே தடைபடுகின்றன. பின்னர் பலகட்ட முயற்சிகளுக்குபின்னர் 11 நவம்பர் 2019ல் அலையன்ஸ் ஏர் விமானநிறுவனம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானசேவையை தொடங்குகிறது. அதுவும் கொரொனா காரணமாக நின்றுபோகிறது. 

பின்னர் கடந்த 2024, செப்டம்பர் 1 முதல் இண்டிகோ விமானநிறுவனமானது சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் நேரடி விமானசேவையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தற்போது சென்னைக்கு அடுத்து திருச்சியுடன் இரண்டாவதாக யாழ்ப்பாணம் விமானநிலையம் வரும் மார்ச் 30 முதல் தினசரி நேரடி விமானசேவையில் இணைய உள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் காவிரிக்கரை டெல்டா வாழ் மக்களின் வரலாற்று, கலாச்சார, பன்பாட்டு உறவுகளை புதுப்பிக்க ஒரு அருமையான வாய்ப்பு.கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் உள்நாட்டு போரினால் தங்கள் பொருளாதாரத்தையும் வாழ்வையும் இழந்து தவிக்கும் யாழ்ப்பாண மக்கள் அனைத்தையும் மீட்டெடுக்க இச்சேவையானது நிச்சயம் உபயோகமாய் இருக்கும். அதேபோல் திருச்சி மற்றும் சுற்றுப்புற மக்கள் யாழ்பாணத்துடனான வியாபார தொடர்பை புதுப்பிப்பதாலும் அதிக அளவில் சுற்றுலா செல்வதாலும் யாழ்ப்பாணம் மற்றும் சுற்றுப்புறத்தில் நம் தொப்புள்கொடி உறவுகள் வாழக்கைத்தரம் மேம்படும் என்பதில் ஐயம் இல்லை. புறப்படுவோம் வாருங்கள்! மார்ச் 30 முதல் இண்டிகோவின் நேரடி விமோனசேவை மூலம் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *