இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை 22.09.2025 அன்று “ சரியான ஆன்டிபயாட்டிக் பயன்பாடு மற்றும் பொறுப்பான சிகிச்சை ” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சி தலைவர் உரை வழங்கிய திரு. ஜி. இராஜசேகரன் அவர்கள் (செயலாளர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள்) மூலம் துவங்கியது. தொடர்ந்து இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா அவர்கள் முக்கிய உரை ஆற்றினார்.

சொற்பொழிவாளர் டாக்டர் ஏ. தங்கவேல், எம்.டி (குழந்தை மருத்துவம்), மூத்த உதவி பேராசிரியர், குழந்தை மருத்துவ துறை, கே.ஏ.பி.வி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி, ஆன்டிபயாட்டிக்குகளின் நியாயமான பயன்பாடு, குழந்தை நலன் மற்றும் பொறுப்பான சிகிச்சை குறித்த சிறந்த கருத்துக்களை தகுந்த எடுத்து காட்டுகளுடன் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நர்சிங், அலைய்ட் ஹெல்த் சயன்சஸ், இயற்கை வைத்தியம் துறைகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்று நிகழ்ச்சிக்கு சிறப்பை கூட்டினர்.

அனைத்து ஏற்பாடுகளும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் — டாக்டர் கே. சித்ரா தேவி ( முதல்வர், அலைட் ஹெல்த் சயன்சஸ்), டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி ஆகியோரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments