திருச்சி அண்ணா பல்கலைக்கழக ஜோன் -13 வது மண்டல அளவிலான தடகளப்போட்டி டிசம்பர் 11 ஆம் நாள் (11.10.2025 ) ஜே.ஜே. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இத்தடகளப்போட்டியில்
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
தடகளப் போட்டிகளில் முதல் இடத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவி எம். தமிழ் இனியா 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடத்தையும், மும்முறை தாண்டுதல் (Trible jump) போட்டிகளில் முதல் இடத்தையும் வென்றுள்ளார்.

மாணவர் பிரிவில் காவியநிலவன் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடத்தையும், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும் வென்றுள்ளார்.
வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்கு
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன், இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன்,
பதிவாளர் முனைவர் எம்.அனுசுயா
மற்றும் உடற்கல்வி இயக்குநர்
திரு. முருகானந்தம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments