இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் திருமதி இந்திரா அம்மையாரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி 28.10.2025 அன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் சேர்மன் திரு. கணேசன் ஐயா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அவரது மகன்கள் இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் திரு. இராஜசேகரன், இயக்குநர் முனைவர்

க. பாலகிருஷ்ணன் ரமேஷ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு. தாமோதரன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் பதிவாளர் முனைவர் எம். அனுசுயா அவர்கள் இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் சித்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர். சௌந்தரராஜன், மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.நித்யா, துணை மருத்துவக் கல்லூரியின்

முதல்வர் டாக்டர் சித்ரா தேவி, கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ச. இரமாபிரபா, கல்வியியல் கல்லூரி முனைவர் இராஜேந்திரன், செவிலியர் கல்லூரி முதல்வர் சத்தியலதா சாரதி, பிசியோதெரபி தெரபி கல்லூரி முதல்வர் முனைவர் பாஃபி இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ராதா, பொறியியல் கல்லூரி துணை

முதல்வர் முனைவர் கார்த்திகேயன் கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் மா.சங்கீதா உட்பட நூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள். அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உணவு வழங்கப்பட்டன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments