Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் தகவல் பலகை, அறிவிப்பு சீரமைப்பு: எனது தலையீட்டிற்கு பிறகு நடவடிக்கை

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை (Digital Display Board) மற்றும் பொது அறிவிப்பு (Announcement) அமைப்புகள் செயல்படாமல் இருப்பதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து 13.03.2026 அன்று தெற்கு ரயில்வே திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களிடம் கடிதம் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் இந்த பிரச்சினையை எடுத்துரைத்தேன்.

அதனைத் தொடர்ந்து எனது தலையீட்டின் பேரில் தற்போது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகையும் பொது அறிவிப்பு அமைப்பும் சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் மூலம் அந்த ரயில் நிலையத்தை தினமும் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் இனி ரயில் வருகை மற்றும் பிளாட்பார்ம் தொடர்பான தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

பிரச்சினையை விரைவாக கவனித்து நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் இதை எனது கவனத்திற்கு கொண்டு வந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *