பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று (05.01.2025) மணப்பாறை சிப்காட் வளாகத்தில்
இவ்விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments