திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் இன்று (16.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தின் செயல்பாடுகளையும் மேலும், PM Kisan திட்டத்தின் கீழ் மற்றும் ஆதார் எண் வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்படும் செயல்பாடுகளையும் மேலும் Pmkisan திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளையும் தொடர்பு கொண்டு ekyc செய்திடவும். ஆதார் எண்ணை அவர்களது வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க உரிய நடவடிக்கை எடுத்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தற்போது விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்திடும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரம் மீட்டும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் (சம்பா), மக்காசோளம், பருத்தி ஆகிய பயிர்களுக்கு நவம்பர் 15 தேதிக்குள் பயிர்காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேலும் இப்பருவத்திற்கு தேவையான நெல், சோளம், கடலை, உளுந்து போன்ற விதைகளை, நுண்ணூட்ட சத்து, உயிர் உரங்கள் ஆகியற்றை போதுமான அளவில் இருப்பு வைத்து விநியோகம் செய்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, தோட்டக்கலைத் துறையின் கீழ் ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத்தின் கீழ் கத்தரி, தங்காளி, மிளகாய், வெண்டை, கீரைகள், கொத்தவரை ஆகிய 6 வகையான விதைகள் அடங்கிய விதை தளைகள் தொகுப்பு மற்றும் மாடித்தோட்ட தளைகள் ஆகியவற்றை உடன் விநியோகம் செய்திட அறிவுறை வழங்கினரர்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, வேளாண்மை உதவி இயக்குநர் மோகனா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் (மணப்பாறை) சிவராமகிருஷ்ணன், மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments