நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் கோரையாறு கிழக்கு கரை ரோடு பகுதிகளில் சாலை அமைக்கும் வகையில் எடமலைப்பட்டி புதூர் முதல் கரூர் புறவழிச்சாலை வரை மூன்று தொகுப்புகளாக
பிரிக்கப்பட்டு தற்போது இரண்டு தொகுப்புகளில் பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை இன்று (21.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேலும் மூன்றாவது தொகுப்புக்கான இடத்தினையும் பார்வையிட்டு இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே. சரவணன் , மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், அரசு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments