திருச்சிராப்பள்ளி: புது தில்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் (Red Fort Metro Station) கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று (10.11.2025) நிகழ்ந்ததாகக் கூறப்படும் அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்புச் சோதனை (Anti Sabotage Check) நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பாதுகாப்பு ஆணையர் மதிப்பிற்குரிய திரு. K. அருள் ஜோதி, IRPFS அவர்களின் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) முதுநிலை கோட்ட ஆணையர் மதிப்பிற்குரிய பிரசாந்த் யாதவ், IRPFS மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோரின் மேற்பார்வையில், இந்தச் சோதனை நடவடிக்கை நடந்தது.

RPF ஆய்வாளர் திரு. அஜய் குமார்
RPF வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சரவணன் (SARAVANAN, SI/BDS)
ரயில்வே காவல்துறை (GRP) DSP சக்கரவர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஷீலா
இவர்களுடன், RPF சப் இன்ஸ்பெக்டர் திரு. சிவராஜா, வெடிகுண்டு தடுப்புப் பிரிவைச் சேர்ந்த திரு. தண்டபாணி, முருகேசன், திருமலை மற்றும் GRP/திருச்சி உதவி ஆய்வாளர் (SI/GRP/Trichy) ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி ரயில் நிலைய வளாகம் முழுவதும், ரயில் பெட்டிகள் மற்றும் காத்திருப்புப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில், ரயில்வே வளாகத்திலோ அல்லது ரயில்களிலோ சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் அல்லது எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சோதனையானது, பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments