திருச்சி உறையூர் ஸ்ரீ விக்னேஷ் 1. பப்ளிக் சீனியர் செகன்டரி பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான ஸ்பார்க் எனும் கலாசாரம், இலக்கியம், அறிவியல், கணிதம் குறித்த பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் சகுந்தலா விருத்தாச்சலம் தலைமை தாங்கினார். தலைவர் கோபிநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கலந்து கொண்டு பேசும் போது, சமூக வலைத்தளங்கள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டாலும் உணர்வு பூர்வமாக தெரிந்து கொள்வதற்கு ஆசிரியர்கள் அவசியம். உங்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்திக் கொண்டால் வாழ்வில் எளிதாகஉயர்நிலைஅடையலாம் என்றார்.
இந்த போட்டிகளில் 25பள் ளிகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார். இதில் ஒட்டு மொத்த சாம்பி யன் பட்டத்தை ஆல்பா விஸ்டம் பள்ளி பெற்றது. ஆர்.எஸ்.கே பள்ளி 2-வது இடத்தை பிடித்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பரிசு வழங்கினார்.
முன்னதாக பள்ளி முதல்வர் கிருத்திகா வரவேற்றார். நிகழ்ச்சியில் விக்னேஷ் கல்விக் குழும துணை தலை வர் லட்சுமிபிரபா, இயக்குனர் வரதராஜன், துணை முதல்வர் சாந்தி, ஆலோசகர் மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments